நெருங்கும் பக்ரீத் பண்டிகை.. களைகட்டிய ஆடுகள் விற்பனை - ஒரே நாளில் இவ்ளோ கோடியா..?
பக்ரீத் பண்டிகையையொட்டி போச்சம்பள்ளி ஆட்டு சந்தையில் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. பக்ரீத் பண்டிகை 29ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு தருமபுரி, ஒசூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைகாக கொண்டுவரப்பட்டன. இதேபோல், ஆடுகளை வாங்க தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இன்று ஒரு நாளில் மட்டும் போச்சம்பள்ளி வார சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனாதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.