அரிய வகை நோயால் அவதிப்படும் பிரபல டாப் நடிகை - அவரே உடைத்த உண்மை... அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2024-09-24 08:27 GMT

அரிய வகை நோயால் அவதிப்படும் பிரபல டாப் நடிகை - அவரே உடைத்த உண்மை... அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனம் திறந்து பேசியுள்ளதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக..

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் கவனிக்கத்தக்க இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஆலியா பட்...

பல ஹிட் படங்களுடன் டாப் நடிகையாக உள்ள ஆலியா பட் தனக்கு அரிய வகை நோய் இருப்பதாக கூறி அதிர்ச்சியுற செய்துள்ளார்..

அதென்ன அரிய வகை என ஆராய்ந்ததில், Attention Deficit Disorder என்ற நோய் தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஒரு விஷயத்தில் 45 நிமிடங்களுக்கு மேல் தன்னால் கவனம் செலுத்த முடியாதாம்... தனது திருமணத்திற்காக மேக்கப் கலைஞர் இரண்டு மணி நேரம் அவகாசம் கேட்ட சூழலில் கூட, தனக்கு நோய் இருப்பதை காரணம் காட்டி முடியவே முடியாது என்று சொல்லிவிட்டதாகவும், இதனால், தன் திருமணத்தில் மிகவும் குறைந்த நேரம் தான் மேக்கப் போடப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆலியா பட்-க்கு உள்ள Attention Deficit Disorder என்ற நோய், ஒருவகையான ஹைப்பர் ஆக்டிவிட்டி சம்பந்தமான கோளாறு என்றும் இதனால் எந்த ஒரு வேலையையும் கவனத்துடன் செய்ய முடியாது என்றும் மருத்துவ ரீதியான விளக்கமாக உள்ளது..

ஏற்கனவே நடிகை சமந்தா மற்றும் ஃபகத் ஃபாசில் தங்களுக்கு ஏற்பட்ட அரிய வகை நோய்கள் குறித்து மனம் திறந்த நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட் பேசியிருப்பதும் தனி கவனம் பெற்றுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்