பாமக நிர்வாகி கொலை முயற்சி - "ENCOUNTER பண்ணனும்" - கோரிக்கை வைத்த மோகன் G
கஞ்சா போதையில் குற்றச்செயலில் ஈடுபடுவோரை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும் என இயக்குநர் மோகன் ஜி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பாமக நிர்வாகி துஷாலை கொலை செய்ய முயன்ற மர்மகும்பல், அவரது வீட்டிற்கு பதிலாக பக்கத்து வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றது. இதையடுத்து துஷாலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த இயக்குநர் மோகன் ஜி, இளைஞர்களுக்கு போதைப் பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும், இதனால் பல குற்றச்செயல் அரங்கேறுவதாகவும் குற்றம் சாட்டினார்.