நுழைவு கட்டணம் வசூலிக்கும் மையத்தில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்

Update: 2022-11-01 12:30 GMT

கன்னியாகுமரியில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் மையத்தில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் டென்டர் தனிநபர் ஒருவரால் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த காருக்கு விவேகானந்தபுரத்தில் உள்ள மையத்தில், அதிகளவில் நுழைவு கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது நுழைவு கட்டணம் வசூலிக்கும் ஊழியர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதில், சுற்றுலா பயணிகளை நுழைவு கட்டண மைய ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்