`Toxic' செய்த வேலை- காட்டிக்கொடுத்த சாட்டிலைட்- சிக்கலில் Rocky Bhai.. அரசியலையே உலுக்கும் பிரளயம்

Update: 2024-10-31 09:12 GMT

`Toxic' செய்த வேலை- காட்டிக்கொடுத்த சாட்டிலைட்- சிக்கலில் Rocky Bhai.. அரசியலையே உலுக்கும் பிரளயம்

கேஜிஎஃப் பட நடிகர் யஷ் நடித்துள்ள பெரிய பட்ஜெட் படத்திற்காக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன பார்க்கலாம் விரிவாக..

கே.ஜி.எஃப். திரைப்படம் மூலம் இந்திய திரைத்துறையில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்தவர் யஷ்...

கே.ஜி.எஃப். படத்தின் முதல் பாகம் பெரும் ஹிட் அடித்த நிலையில், இரண்டாம் பாகமும் பெரும் வரவேற்பை பெற யஷ்-ன் அடுத்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியது..

இந்நிலையில் தான் இயக்குநர், கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் டாக்சிக் படத்தில் நடித்துள்ளார் யஷ்..

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது...

டாக்சிக் படத்தின் படப்பிடிப்பு தளம் அமைக்க பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டியதாக கர்நாடக அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரே குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்க்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை, தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவது, விற்பனை செய்வது, திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு தளம் அமைப்பது என சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.

1960 களில் 599 ஏக்கர் வன நிலம் முறையான டி - நோட்டிபிகேஷன் இல்லாமல் இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்க்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாக கூறிய அவர் பல ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வனப்பகுதியை சட்டவிரோதமாக மாற்றியுள்ளதாக கூறியுள்ளார்.

இதே போல் தான் டாக்சிக் படத்திற்கும் செட் அமைக்க நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் சாட்டிலைட் புகைப்படங்களும் மரங்கள் வெட்டப்பட்டதை அம்பலப்படுத்தியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்