ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மத்திய அமைச்சர்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அஸ்ஸாம் ராணுவத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
தேஸ்பூரில் உள்ள ராணுவ ஜவான்களை சந்தித்த அவர், அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினார். இதேபோன்று எல்லை பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களும் தங்களது தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். ஜம்மு காஷ்மீரில் உள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கம்பி மத்தாப்பு கொள்ளுத்தியும் புஸ்வானம் வெடித்தும் மகிழ்ந்தனர். மேற்கு வங்க மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்தியா வங்கதேச எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பள்ளி குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடினர். பஞ்சாப்பில் உள்ள எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், இனிப்புகளை பரிமாறியும் மகிழ்ந்தனர். தங்களது குடும்பங்களை பிரிந்து எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு, இந்த கொண்டாட்டங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தியது.