"இந்தியில் கேட்ட கேள்விக்கு தமிழில் பதில் சொன்னதால் மீனவர்கள் மீது தாக்குதல்" - வைகோ கடும் கண்டனம்
தமிழக மீனவர்களுக்கு இந்தி தெரியாததால்தான் அவர்களை இந்தியக் கடற்படையினர் கொடூரமாகத் தாக்கி சித்திரவதை செய்துள்ளனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடற்படையினர் இந்தியில் எழுப்பிய கேள்விக்கு மீனவர்கள் தமிழில் பதில் அளித்ததால், அவர்கள் கோபமடைந்து, சித்திரவதை செய்து அவர்களுக்குள் நகையாடி ஏளனம் செய்திருக்கிறார்கள் என்றும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இந்தி தெரியாததால் தமிழக மீனவர்களை சித்திரவதை செய்த இந்திய கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், தமிழக மீனவர்களிடம் மத்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தி உள்ளார்.