நிர்பயாவிற்கு பிறகும் தொடரும் கொடூரம்!பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமா?பேரதிர்ச்சியை ஏற்படுத்திய...

Update: 2022-08-31 10:40 GMT

இந்நிலையில் தான், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது, தேசிய குற்ற ஆவண காப்பகம்.

அறிக்கையின் படி, பெண்களுக்கு எதிராக கடந்த ஆண்டு மட்டும் 4 லட்சத்திற்கும் மேலான வழக்குகள் பதிவாகியுள்ள மாநிலங்கள் என்று எடுத்து கொண்டால் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், ராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.

பெண்கள் கடத்தலுக்கு ஆளாவது தொடர்பான வழக்குகள் உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகம் பதிவாகியுள்ள நிலையில், பெரு நகரங்கள் என்று எடுத்து கொண்டால் டெல்லியிலேயே பெண்கள் அதிகம் கடத்தப்படுவது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் பெண்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்வது தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பெண்கள் அதிகம் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதும்... பெருநகரம் என்று எடுத்து கொண்டால் டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் மும்பையில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்கள் அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது.

பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி கொலை செய்யப்படும் சம்பவங்கள் உத்தர பிரதேசத்திலும், அசாமிலும், மத்திய பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் அதிகம் பதிவாகி வருவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக 18 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் தங்களின் கணவர், உறவினர் அல்லது நண்பர்களால் அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருவது தெரியவந்துள்ளது.

இதேபோல், 9 பெருநகரங்களில் தலைநகரான டெல்லி யிலேயே கொலை வழக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன.

பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் பெண் குழந்தைகள் என்று எடுத்து கொண்டால், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் இருப்பதும்...

பெருநகரங்களில் டெல்லி, மும்பை மற்றும் சென்னையில் பெண் குழந்தைகள் அதிகம் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதும் தெரியவந்துள்ளது. இப்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே செல்வது நாடு எதை நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்