இயக்குனர் அட்லி - பிரியா தம்பதியினர், தங்களது மகனுக்கு மீர் என பெயர் வைத்துள்ளனர். காதல் திருமணம் செய்துக் கொண்ட அட்லி - பிரியா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண்குழந்தை பிறந்தது. நான்கு மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு மீர் என பெயர் வைத்துள்ள அட்லி - பிரியா தம்பதி தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.