முதல்வரை தரக் குறைவாக பேசியதாக புகார்...வசமாக சிக்கிய அத்திவரதர் கோவில் மணியக்காரர்

Update: 2023-07-09 07:02 GMT

தமிழக முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசியதாக, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மணியக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகாரினை, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் அளித்துள்ளார். அதில், கோயில் வளாகத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சரை தரக்குறைவாக பேசியதாகவும், அதனை தட்டிக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்பேரில், கோயில் மணியக்காரர் கிருஷ்ணகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்