கடலூரில் மாணவி ஸ்ரீமதிக்கு பிரமாண்ட மணிமண்டபம்

Update: 2023-07-12 02:05 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல், அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம், பெரிய நெசலூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் மாணவியின் பெற்றோர், மணிமண்டபம் கட்டியுள்ளனர். முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அந்த மணிமண்பத்தை, புதன்கிழமையன்று திறந்து வைப்பதாக கூறியுள்ளனர். மணி மண்டபத்தைச் சுற்றிலும் மரக்கன்று நட்டு வைக்கப்போவதாகவும் அவர்கள் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வெளியூரில் இருந்து பலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்