"2047 -இல் பிரதமர் மோடி கூறியதைப்போல்..."; - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

Update: 2022-09-19 03:10 GMT

இந்தியா, நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் 2047-ஆம் ஆண்டில், உலகுக்கே தலைமை ஏற்கும் பண்பை பெற வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் கேட்டுக் கொண்டார்.

சென்னையில் நடைபெற்ற மூவர்ண நாட்டிய நாடகத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர், சுதந்திரத்துக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களின் வரலாற்றை படித்து தேசப்பற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ஆங்கிலேயர் இல்லை என்றால் நம்மால் ஒரு குண்டூசி கூட செய்ய முடியாது என்று சிலர் கூறிய நிலையில், கொரோனா காலத்தில் 150 நாடுகளுக்கு தடுப்பூசியே ஏற்றுமதி செய்துள்ளோன் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்