ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரம் -பாதிக்கப்பட்டவர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு

Update: 2023-04-13 14:34 GMT
  • ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள், பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களில் சிலர் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • இதன் விளைவாக பாதிக்கப்ட்டவர்களில் 10 பேர், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்தனர்.
  • மோசடியில் ஈடுபட்டவர்களில் சிலர் பாஜகவினர் என்பதால், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
  • ஆனால், அவர்களின் வாங்க, பாஜக நிர்வாகிகள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்