ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முதற்கட்டமாக 50 பக்க அளவிலான குற்றப்பத்திரிகை தாக்கல்
தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சென்னை பொருளாதார குற்ற பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்
360 புகார்களில் தொடர்புடைய ரூ.17.50 கோடி மோசடி தொடர்பாக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்/3000 பக்கங்கள் அளவிலான கூடுதல் ஆவணங்கள் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு
அதிக வட்டி தருவதாக கூறி 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக 40 பேர் மீது வழக்கு
நிலுவையில் உள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 255 புகார்கள் குறித்த விசாரணைக்கு பிறகு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது