ஐஏஎஸ் அதிகாரியுடன் வாக்குவாதம்.. கே.எஸ்.அழகிரி உறவினர்கள் மீது வழக்குப்பதிவு

Update: 2022-10-02 08:52 GMT

காரை முந்திச் செல்வதில் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையருடன் ஏற்பட்ட தகராறில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியின் உறவினர் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை அசோக் நகரில் காரை முந்தி செல்வதில் கே.எஸ்.அழகிரியின் உறவினர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் கே.எஸ்.அழகிரியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கண்ணன் உட்பட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் கூடுதல் ஆணையர் கண்ணனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கே.எஸ்.அழகிரியின் உறவினர்கள் மீதும் 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே, கே.எஸ்.அழகிரியின் உறவினர்களும், கூடுதல் ஆணையரின் குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் வசைபாடி சண்டையிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதனை வெளியிட்ட பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ராகுராம், பெண்களுக்கு பாதுகாப்பில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்