5ஜி-க்கு மாறுறீங்களா..? புது ரூட்டில் ஆன்லைன் மோசடி அதிர வைக்கும் பின்னணி - உஷார் மக்களே..!

Update: 2022-10-11 10:56 GMT

தலைவிரித்தாடும் சைபர் க்ரைம் மோசடிகளில் சிக்காமல் இருப்பதே இன்றைய உலகின் மிக பெரிய சவாலாக மாறியுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

ரக ரகமாக... வித விதமாக மோசடிகளை கையில் எடுத்து... 'நாம் ஏமாந்துவிட்டோம்' என நாம் சுதாரித்து கொள்வதற்கு முன்பே நம் வங்கி கணக்கில் இருந்த மொத்த ரூபாயையும் சுருட்டிவிடும் ஆன்லைன் மோசடி வலை தான்... இன்றைய டிரெண்ட்.

உலகையே நம் கைக்குள் சுருக்கி கொண்டு வந்து கொடுத்த செல்போனுக்கு அனுப்பப்படும் 'ஒற்றை லிங்க் தான்'... அத்தனை மோசடிகளுக்கும் காரணம்.

ஆதாவது நாம் யூடியூப் லிங்கை தானே தொடுகிறோம் என்று நினைத்து அந்த லிங்க்கை கிளிக் செய்ததும்... நமது அக்கவுண்டில் உள்ள மொத்த பணமும் காலியாகிவிட்டது என்றால் என்ன செய்வது?

இன்னொன்று பகுதி நேர வேலைக்கு நீங்கள் தயாரா ? என அனுபப்படும் விளம்பரம்...

மற்றொன்று உங்களுக்கு மொபைல் எண்ணிற்கு பரிசு விழுந்திருக்கும்... பரிசு விவரம் தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள் என வரும் எஸ்.எம்.எஸ்கள்...

இது பரவாயில்லை... உடனே இந்த லிங்கிற்குள் சென்று மின்சார கட்டணம் செலுத்துங்கள்.. இல்லையென்றால்

மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ்-ஐ நம்பி, அவர்களின் செல்போனுக்கு வந்த ரகசிய குறியீடான ஒ.டி.பி. எண்ணை கூறி சமீபத்தில் பணத்தை தொலைத்தவர்கள் ஏராளம்.

போலியான 'லிங்க்' அனுப்பி, உங்களுக்கு வங்கி கடன் தருகிறோம் என நம்பிக்கை வார்த்தை கூறி நமது செல் போனில் உள்ள போட்டோ முதல் அத்தனை தகவல்களையும் திருடும் சம்பவம் ஒருபக்கம் அறங்கேறிவருகிறது.

லிங்க் மட்டும் தான் பிரச்சனையா என்றால் இல்லை... நாம் ஆன்லைனில் பொருள் வாங்கும் போதும் ஏமாற்றப்பட நிறைய வாய்ப்புள்ளது.

சமீபத்தில் வாங்கிய பொருளுக்கு பணம் செலுத்த ஸ்கேன் செய்யப்படும் QR குறியீட்டையும் இந்த மோசடி கும்பல் விட்டு வைக்க வில்லை.

வாட்ஸ் அப்பை பொறுத்தவரை இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க டூ-ஸ்டெப்-வெரிஃபிகேஷன் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அதோடு, டிஜிட்டல் முறையில் பணத்தைச் செலுத்துவதற்கு SSL சான்றிதழ் அல்லது டொமைன்களில் "https "இல்லாத இணையதளங்களில் இருந்து பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.

இப்படி அத்தனை மோசடிகளிலும் இருந்து தப்பியவர்களை புதிய ரூட் எடுத்து ஏமாற்ற தயாராகி வரும் கும்பல்... தற்போது கையில் எடுத்திருப்பது, 5ஜி-ஐ.

இந்தியாவில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் 5ஜி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், பலரும் 4ஜி-யில் இருந்து 5ஜி சிம்கார்டுகளுக்கு மாற ஆர்வம் கொண்டுள்ளனர்.

இந்த ஆர்வத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, SIM அப்டேட் என்று லிங்க் அனுப்பி, புதிய வகை மோசடியில் ஈடுபட்டு வருகிறது, ஒரு கும்பல்.

இதனால் பொதுமக்கள் தங்களின் 4ஜி சிம்கார்டு களை 5ஜி சிம்கார்டுகளாக மாற்ற வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்திற்கு நேரில் செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர், சைபர் க்ரைம் அதிகாரிகள்.

உத்தர பிரதேசத்தில் போலி ஆதார் கார்டு , ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை தயாரித்து, வங்கியில் கடன் வாங்கும் கும்பல்களை களையெடுத்து வருகின்றனர், போலீசார்.

இப்படி நமக்கு விரிக்கப்பட்டும் வலையில் சிக்கி மோசம் போகாமல் இருக்க தேவை.. விழிப்புணர்வு மட்டுமே.

Tags:    

மேலும் செய்திகள்