அரசு அதிகாரியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார்

Update: 2023-06-24 01:59 GMT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, மின் இணைப்பை போர் இணைப்பாக மாற்ற ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, உதவி மின் செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார். பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர், மின் இணைப்பை போர் இணைப்பாக மாற்றுவதற்காக, சிட்டாம்பூண்டி மின் நிலையத்தில் உதவி மின் செயற்பொறியாளர் ஜெகன்மோகனை அனுகியதாக தெரிகிறது. இதற்கு ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், அந்த பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜெகன்மோகனை கையும் களவுமாக பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்