விஷால் படப்பிடிப்பில் மீண்டும் விபத்து... லைட்மேன் தலையில் லைட் கம்பம் விழுந்து நெற்றியில் காயம் - மருத்துவமனையில் அனுமதி
- பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம், ஈவிபி பிலிம் சிட்டியில் நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு நடந்து வருகிறது
- இதில் குமணன்சாவடியை சேர்ந்த முருகன்(33), என்பவர் லைட் மேனாக வேலை செய்ய வந்தபோது எதிர்பாராத விதமாக லைட் கம்பம் அவரது நெற்றியில் பட்டதில் காயம் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
- கடந்த வாரம் இதே படப்பிடிப்பு தளத்தில் சண்டை காட்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இரண்டாவது முறையாக நடந்த விபத்தில் லைட் மேன் காயம் அடைந்தது படப்பிடிப்பு தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.