குடும்பத் தகராறில் ஏற்பட்ட ஆத்திரம்... தந்தையை குத்திக் கொன்ற மகன் - தாயுடன் சிறை சென்ற சோகம்

Update: 2023-01-04 04:21 GMT

ராமநாதபுரம் அருகே, குடும்பத் தகராறில், விலங்குகளை வேட்டையாடும் ஆயுதத்தால் தந்தையை குத்திக் கொலை செய்த மகனையும், உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த வையக்கிழவன் என்பவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி பிரிந்த நிலையில், 2வது மனைவியுடன் வையக்கிழவன் வாழ்ந்து வந்தார். ஆனால், வையக்கிழவனுக்கும், முதல் மனைவி சுப்புலட்மிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் தகராறு ஏற்படவே, சுப்புலட்சுமியை வையக்கிழவன் தாக்கியுள்ளார். இந்த விவகாரம் சுப்புலட்சுமியின் மகன் வசியேந்தரனுக்கு தெரியவர, தந்தை என்றும் பாராமல், விலங்குகளை வேட்டையாடும் ஆயுதத்தால் வையக்கிழவனை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், தாய் மற்றும் மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்