அதிகரிக்கும் கிரானைட் மாஃபியாக்கள்... சட்ட விரோதமாக கடத்தப்படும் கிரானைட் கற்கள் - தமிழக அரசுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் கடிதம்
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் இருந்து, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்கள் வழியாக தமிழகத்துக்கு சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதனால், ஆந்திரம் மற்றும் தமிழக எல்லைகளில் கிரானைட் மாஃபியாக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சட்ட விரோத கிரானைட் கொள்ளையைத் தடுத்து, கடத்தலில் ஈடுபடும் மாபியாக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார்.