டெல்டா மாவட்டங்களில், சுரங்கப் பணிகள் நிறுத்தப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சென்னை எழும்பூரில் பாமக சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், என்எல்சி விவகாரத்தில், நிலக்கரி சுரங்கப் பணிகள் நிறுத்தப்பட்டதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள திமுகவினர் பட்டியல் குறித்து கேட்டதற்கு, விசாரித்தால் உண்மை தெரிந்து விடும் என்றும் அன்புமணி ராமதாஸ் பதில் அளித்தார்.