இந்து வீட்டில் வரவேற்பு; தர்காவில் கந்தூரி கொடியேற்றம் - மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய நிகழ்வு..!

Update: 2022-10-24 07:32 GMT

இந்து வீட்டில் வரவேற்பு; தர்காவில் கந்தூரி கொடியேற்றம் - மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய நிகழ்வு..!

நெல்லை மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசலில் நடைபெற்ற கந்தூரி விழா, மத நல்லிணக்கத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக விளங்கியது. திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலில் கந்தூரி விழா கொடியேற்றத்திற்காக யானை மீது கொடி மற்றும் சந்தன குடம் ஊர்வலமாக தர்காவிற்கு எடுத்து செல்லப்பட்டது. வழியில் ராமன்குடி முத்துகிருஷ்ணாபுரத்தில் அருள்துரை நாடார் வீட்டில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு காணிக்கை, அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, யானை தர்கா வந்தடைந்ததும் அங்கு கொடியேற்றப்பட்டது. இங்கு ஏராளமான இஸ்லாமியர்கள் சந்தன குடம் எடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். தென் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்