தாய் வீட்டுக்கு வரும் அம்மன்..வித விதமாய் பிறந்த வீட்டு சீதனம்..

Update: 2023-07-07 11:02 GMT

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் மாற்று சமூகத்தின இணைந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்...

செம்பரம்பாக்கம் கிராம மக்கள் குலதெய்வமாக வழிபடும் நேமர்த்தம்மன் கோயிலில் உள்ள அம்மன் பட்டியலின சமூக பெண்ணாக இருந்து மாற்று சமூகத்தில் திருமணம் செய்து கொண்டு சென்றதாக நம்பிக்கை உண்டு... இதனால் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாய் வீட்டிற்கு அம்மன் வந்து செல்வது வழக்கம்... அப்போது 2 சமூக மக்களும் ஒன்றாக இணைந்து திருக்கல்யாணம், சீர் வரிசை திருவிழா நடத்தி வழிபடுவர். அந்த வகையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நேமர்த்தம்மன் திருகல்யாணம் கடந்த வாரம் துவங்கியது. இறுதி நாளான இன்று அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டிற்கு வருகை புரிந்தார். அங்கு தாய் வீட்டு சீதனமாக கண் மை, சோப்பு, சீப்பு, கண்ணாடி, அணிகலன்கள் வழங்கப்பட்டன.... ஆடு, கோழிகள் பலியிடப்பட்டன. கிராமத்தில் ஒவ்வொரு குடும்பமும் கட்டில் சீர் வரிசை வைத்து வழிபட்டனர். அதிர் வேட்டுகள் முழங்க... வாத்தியங்கள் இசைக்க... திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது... இறுதியாக அம்மன் வழிபாட்டிற்குப் பிறகு புகுந்த வீடான கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்... 2 சமூகத்தினரின் நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானோர் குவிந்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்