பழைய தேவாலய இடத்தில் புதிய தேவாலயம் கட்ட கடும் எதிர்ப்பு.. கிராம மக்கள் 80 பேர் கைது

Update: 2023-03-26 06:50 GMT
  • தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பழைய தேவாலயம் இருந்த இடத்தில் புதிய தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் கைது செய்தனர்.
  • அச்சங்குட்டம் கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவாலயமும், அதையொட்டி இருந்த தொடக்கப்பள்ளியும் இடிக்கப்பட்டு, வேறு இடத்தில் பள்ளி கட்டடம் கட்டப்பட்டது.
  • பழைய தேவாலயம் இருந்த இடத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் புதிய தேவாலயம் கட்டுவதற்கான பணிகளை இன்று தொடங்கியபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • போலீசார் சமாதானப்படுத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால், 42 பெண்கள் உட்பட 86 பேரை கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்