#BREAKING || "தீர்ப்பு யார் பக்கம் வந்தாலும்.. தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதி" - ரவீந்திரன் துரைசாமி (அரசியல் விமர்சகர்)
- ஜூன் மாதம் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமானது
- ஜூலை 11 பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்
- ஜூலை 11 பொதுக்குழுவில் ஓபிஎஸ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்
- பொதுக்குழு முடிவை எதிர்த்து, ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு செல்லாது, இரட்டைத் தலைமையே தொடரும்- தனி நீதிபதி தீர்ப்பு
- தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு
- உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு
- அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
- காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு
- அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? செல்லாதா?
- தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ்