"நீட் ரிசல்ட் வந்தபின்.. 72 மணி நேரம் கவனம் வேண்டும்" - உளவியல் நிபுணர் சொல்லும் தகவல்
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்களை மனம் தளராமல் பார்த்து கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு.
பல மாணவர்களின் மருத்துவ கனவு பொதிந்திருப்பது என்னவோ இந்த ஒற்றை தேர்வுக்குள் தான்.
நீட் என்ற இந்த ஒற்றை தேர்வால் உங்கள் மருத்துவ துறை ஆர்வத்தை சிதைத்துவிட முடியாது என்பதே உண்மை.இதை புரிந்து கொண்டாலே போதும்.
எதையும் சாதிப்பது மிக எளிது என்பதே கல்வித்துறை முதல் உளவியல் நிபுணர்கள் வரையிலான அறிவுரை.
பொதுவாக நாம் எதிர்பார்த்த ஒன்று நடைபெறாவிட்டால் மனம் தளர்ந்து போகக்கூடும்.
அந்த வேளையில் நாம் தவறான முடிவுகளை நம்மை அறியாமலேயே எடுத்துவிட நேரிடலாம்.
இதனால் தான் தேர்வு முடிவுகள் வெளியான முதல் 72 மணி நேரம் மிக முக்கியம் என்கின்றனர், உளவியல் நிபுணர்கள்.