அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளன.
- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
- இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, வழக்கு விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தது.
- இந்த நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும்16 ம்தேதி நடைபெறுவதாக ஈ.பி.எஸ் அறிவித்ததை சுட்டிக்காட்டி, வழக்கினை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு முறையீட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஓபிஎஸ் தரப்பு மனுக்களை முன்னதாகவே விசாரிக்க ஒப்புக் கொண்டனர். அதன்படி, இன்று வழக்கு விசாரணை நடைபெறுகிறது...