ஆதிபுருஷ் டிக்கெட்டுகள் இலவசம்...புது முயற்சியை கையாளும் படக்குழுவினர் வெளிப்படையாக சொன்ன The Kashmir files பட தயாரிப்பாளர்
தெலங்கானாவில் அரசு பள்ளிகள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் ஆதிபுருஷ் பட டிக்கெட்டுகள் இலவசமாக வழங்க உள்ளதாக The Kashmir files பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். பிரபாஸ் நடிப்பில் வரும் 16ஆம் தேதி ஆதிபுருஷ் படம் வெளியாகும் நிலையில், அனைத்து தியேட்டரிலும் ஒரு சீட் அனுமனுக்கு ஒதுக்கப்படும் என படக்குழு தெரிவித்தது. இந்த நிலையில், ராமரின் மீது கொண்ட பக்தியின் காரணமாக, 10 ஆயிரத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகளை தெலங்கானாவில் அரசு பள்ளிகள், முதியோர் இல்லங்களுக்கு இலவமாக வழங்க உள்ளதாக The Kashmir files பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.