ஆதிதிராவிட பெண் ஊராட்சி மன்றத் தலைவர் விரட்டியடிப்பு - கிராம சபைக் கூட்டத்தில் பரபரப்பு

Update: 2022-10-03 02:30 GMT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், அருந்தி சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவரை ஒரு பிரிவினர் பேச விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம சபைக் கூட்டத்தில், ஊர்மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களின் குறைகளைத் தெரிவித்தனர். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ஏழுமலை பேச முற்பட்டபோது, ஒரு தரப்பினர் குடிபோதையில் அவரை பேச விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்தனர். மேலும், அவரை அங்கிருந்து விரட்டியடித்ததாகவும் தெரிகிறது. இதனால் வேதனை அடைந்துள்ள சித்ரா ஏழுமலை, தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதால், ஊராட்சியில் ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க தேவையில்லை என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்