"அதானி நிறுவனத்தில் ரூ.20,000 கோடி யாருடையது?" - கேள்வி கேட்டு சட்டென ஆவேசமாக கிளம்பிய ராகுல் காந்தி
- அதானியின் ஷெல் நிறுவனத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பினாமி யார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
- டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் தேர்வு தொடர்பான, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த ராகுல் காந்தியிடம், நீதித்துறைக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுப்பதாக பாஜக குற்றம்சாட்டுவது குறித்து கேட்கப்பட்டது.
- அப்போது, அதானியின் ஷெல் நிறுவனத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் யாருக்கு உள்ளது என்றும், அதற்கான பினாமி யார் என்றும் கேள்வி எழுப்பி அங்கிருந்து ஆவேசமாக ராகுல் காந்தி சென்றார்.