"அன்றும், என்றும் மாறாத எவர் கிரீன் காம்போ!" - 'ஈபில் டவர்' முன் காதலரை அறிமுகப்படுத்திய ஹன்சிகா!
ஈஃபில் டவர் முன்பு தனது வருங்கால கணவருடன் நடிகை ஹன்சிகா மோத்வானி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எங்கேயும் காதல் படம் மூலம் அறிமுகமாக தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்த ஹன்சிகா மோத்வானி, சோஹைல் கதுரியா என்ற தொழிலதிபரை டிசம்பரில் மணமுடிக்க உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனை உறுதி செய்யும் விதமாக பிரான்ஸின் பாரீஸ் நகரில் உள்ள உலகப்புகழ்பெற்ற ஈஃபில் டவர் முன்பு சோஹைல் - ஹன்சிகா ஜோடி திருமண செய்தியை பகிர்ந்துள்ளது.