பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்காக கள்ளக்குறிச்சி மாணவிகள் செய்த செயல் -வைரல் வீடியோ

Update: 2023-02-25 03:51 GMT

சிரியா மற்றும் துருக்கியில் நடந்த நில நடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு உதவும் விதமாக கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்று நிதி வசூலித்தனர்.

சின்ன மணியந்தல் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ, மணவிகள் காலில் செருப்பு கூட இல்லாமல் வீடு, வீடாக சென்று நிதி வசூலிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் வசூலான 7 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்