இந்திய அணியின் அதிரடி அறிவிப்பு.. மாறிய கேப்டன்.. மிஸ் ஆன சீனியர்ஸ் - கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய ஷாக்!
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான இருபது ஓவர் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களை தொடர்ந்து அடுத்த மாதம், 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இந்தநிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில், சூர்ய குமார் யாதவ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், சஹால் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் கலக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோரும், அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்