ஓய்வு பெறும் நாளில் 2 அலுவலர்கள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை..! ஆவினில் நடந்தது என்ன?
சென்னையில் ஓய்வு பெறும் நாளில், ஆவின் நிறுவன அலுவலர்கள் இருவர், தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஓய்வு பெறும் நாளில், ஆவின் நிறுவன அலுவலர்கள் இருவர், தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, முறைகோடுகளில் ஈடுபட்டதாக, ஆவின் நிறுவனத்தின் மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸிடம் லஞ்ச ஒழிப்வு போலீசார் விசாரித்து வருகின்றனர். அதன்படி, விசாரணை முடியும் வரை கிறிஸ்துதாஸ் ஒய்வு பெற அனுமதி இல்லை என பணியிடை நீக்கம் செய்து, பால் வளத்துறை மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஆவின் இணைய விற்பனை பொது மேலாளரான புகழேந்தி மற்றும் இணைய பால் பதம் பொது மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் ஓய்வு பெறும் நாளிலேயே தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணி காலத்தில் ஆவின் நிறுவன தணிக்கையில் எற்பட்டுள்ள குறைகள் மற்றும் நிதி இழப்பு ஏற்படுத்தி உள்ளதன் காரணமாக, தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.