சாலையோரத்தில் உறங்குபவர்களுக்கு 3 ஆண்டாக உதவி செய்யும் மாணவி - திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2022-12-21 05:06 GMT

சாலையோரத்தில் உறங்குபவர்களுக்கு 3 ஆண்டாக உதவி செய்யும் மாணவி - திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்

மார்கழி மாத குளிரில் சாலையோரத்தில் உறங்குபவர்களுக்கு, தொடர்ந்து 3வது ஆண்டாக போர்வை வழங்கி உதவிய பள்ளி மாணவியின் செயல், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி சுகித்தா, சிலம்பத்தில் கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ள இவர், திருச்சியின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் படுத்து உறங்கும் 100 பேருக்கு, போர்வை வழங்கி உதவியுள்ளார். தொடர்ந்து 3வது ஆண்டாக போர்வை வழங்கி உதவியுள்ள சுகித்தா, இவ்வாறு உதவி செய்வது தனக்கு திருப்தி அளிப்பதாக கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்