சாலையில் சென்றவர்களை கடித்துக் குதறிய வெறி நாய் - உச்சகட்ட பீதியில் மக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சாலையில் சென்றவர்களை கடித்துக் குதறிய வெறி நாயை, பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். பாலாஜி நகரில் சுற்றித் திரிந்த வெறி நாய் ஒன்று, அந்த வழியாக சென்ற பள்ளி மாணவி, தபால் ஊழியர் உள்பட 10 பேரை கடித்துக் குதறியது. இதில், படுகாயமடைந்த அனைவரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அச்சமடைந்த பொதுமக்கள், அந்த வெறி நாயை அடித்துக் கொன்றனர்.