விழுப்புரம் சிந்தாமணி அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இளங்காட்டை பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவர் காசாளராக பணியாற்றி வந்திருக்கிறார். நேற்று முன்தினம் காலை வங்கியில் இருந்து சுமார் 43 லட்ச ரூபாய் பணத்தை திருடிவிட்டு மாயமாகி இருக்கிறார் காசாளர் முகேஷ். இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருடிய பணத்தில் மூவாயிரம் ரூபாயை ஒருவருக்கு அனுப்பிவிட்டு தன்னை பணத்துக்காக ஒரு கும்பல் கடத்தி விட்டதாகவும் தற்போது தான் எங்கே இருக்கிறேன் என தெரியவில்லை எனவும் அந்த ஆடியோவில் நாடகமாடி இருக்கிறார் அவர்...
இதனைத் தொடர்ந்து செல்போன் சிக்னலை வைத்து பல இடங்களிலும் தனிப்படை போலீசார் தேடி வந்துள்ளனர். முதலில் செல்போன் சிக்னல் பெங்களூரில் இருப்பது போன்றும், அடுத்து சென்னை திருவான்மியூர், மூன்றாவதாக விழுப்புரத்தில் பேருந்து நிலையம் அருகே இருப்பதாக காண்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே முகேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 43 லட்ச ரூபாய் பணத்தை மீட்டு இருக்கின்றனர்.
போலீசார் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவலை முகேஷ் கூறியிருக்கிறார். கடந்த ஆறு மாதத்துக்கு முன்பாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் தான் ஈடுபட்டு வந்ததாகவும், ஏராளமான பணத்தை விளையாண்டு இழந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியும் விளையாண்டு பணத்தை இழந்திருக்கிறார் அவர்...