"டிசம்பர் 5ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் டிச. 5-ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும், சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும், டிச. 8 ஆம் தேதி வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் நிலவக்கூடும், இன்றைய தினம் தென் தமிழகம், வடதமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, டிசம்பர் 4, 5 மற்றும் 6 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், 7 ஆம் தேதி கனமழையும் பெய்யும், சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யலாம்