மாயமான மகனை மீட்டு தரக்கோரி மனு கலெக்டர் ஆபிசில் கண்ணீர் விட்டு கதறிய தாய்...
சிங்கப்பூரில் கடலுக்கு குளிக்கச் சென்று மாயமான மகனை மீட்டுத் தரக்கோரி, சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார். மானாமதுரையை அடுத்த கீழப்பசளை கிராமத்தைச் சேர்ந்த பிரசாத், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் கட்டுமானப் பணிக்காக சென்றுள்ளார். இரு தினங்களுக்கு முன்பு விடுமுறையை கழிப்பதற்காக நண்பர்களுடன் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற அவர் மாயமானார். நண்பர்கள் அளித்த தகவலின்பேரில், பிரசாத்தின் தாய் முத்துலட்சுமி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.