தன்னை பராமரித்த பெண்ணை கழுத்தை அறுத்துக் கொன்ற நபர் - புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த பயங்கரம்
புதுக்கோட்டை அருகே தன்னை பராமரித்து வந்த பெண்ணை மனநலம் பாதித்த நபர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வைத்தி கோவிலை சேர்ந்தவர் மாரிக்கண்ணு. 50 வயதான இவர், தன்னுடைய உறவினரான மனநலம் பாதிக்கப்பட்ட குலசேகரன் என்பவரை பராமரித்து வந்துள்ளார்.
இதனிடையே தன் வீட்டு வாசலில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மாரிக்கண்ணு சடலமாக கிடந்தார்.
விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட குலசேகரனே மாரிக்கண்ணுவை கொலை செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.