சிறுமியுடனான காதலை கண்டித்ததால் வழக்கறிஞருக்கு சரமாரி கத்தி குத்து

Update: 2023-07-11 03:16 GMT

    சென்னை புளி யந்தோப்பு பகுதியில் சிறுவனின் காதலை கண்டித்ததால் தமிழ்ச்செல்வன் என்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞரை கத்தியால் குத்திய சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். உறவினரான 15 வயது சிறுமியை காதலித்ததால் சிறுவனை வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் மற்றும் நண்பர்கள் வழக்கறிஞரை தமிழ் செல்வனின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினர். பலத்த காயத்துடன் தமிழ்ச்செல்வன் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட 8 பேரில் 3 பேர் சிறையிலும் மற்றவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்