"மேனேஜர் சொன்ன அந்த ஒரு வார்த்தை..".. ஒடைஞ்ச மனுஷன் வாழ்க்கையே அதோட... - மதுராந்தகத்தில் சோகம்

Update: 2023-06-07 04:57 GMT

மதுராந்தகத்தை அடுத்த பள்ளிபேட்டையைச் சேர்ந்த சேகர் மகன் கணபதி, மேல்மருவத்தூரில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்லூரிக்குச் சென்ற அவரிடம், சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறிய மேலாளர் சண்முகமணி, வேலையை ராஜினாமா செய்யுமாறு கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து வீட்டுக்கு வந்த அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த அச்சிறுபாக்கம் போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கணபதியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவருடைய உறவினர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கு வந்த மதுராந்தகம் டிஎஸ்பி, முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் உறவினர் கலைந்து சென்றனர்

Tags:    

மேலும் செய்திகள்