மயிலாடுதுறையை சேர்ந்த கண்ணன், இறந்த பிறகு தனது உடலை தானம் செய்ய வேண்டும் என கூறிவந்துள்ளார். மேலும் கண்தானம் செய்யவும் அவர் பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. கண்ணன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது. மேலும் கண்ணனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது மனைவி வைஜெயந்தி மாலா, கணவரின் உடலை பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்தார். சிறிது தூரம் ஆம்புலன்சில் கண்ணனின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட நிலையில் அதில் உறவினர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். இறந்த பிறகு கணவரின் ஆசையை நிறைவேற்றிய மனைவியின் செயல்