ஜஸ்ட் மிஸ்ஸில் பறந்த விமானம்.. ஏர்போர்ட்டில் மத்திய இணையமைச்சர் L முருகனுக்கு நடந்த சம்பவம்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், விமான நிலையத்திற்கு காலதாமதமாக வந்ததை அடுத்து, டெல்லி செல்வதற்கான விமானத்தை தவறவிட்டார். விஸ்தாரா விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த அவர், தாமதமாக வந்த நிலையில், போர்டிங் முடிவடைந்ததால், அடுத்த விமானத்திற்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனிடையே, விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்களை வழிநடத்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது மெத்தனப் போக்கால் மத்திய இணை அமைச்சர் விமானத்தை தவறவிட்டதாகவும் கூறப்படுகிறது.