உயிருடன் வாழும்போதே கொடூர நரகம்.. இந்நோய் இவர்களை தான் அதிகம் தாக்கும் - மரண பீதியூட்டும் லேன்செட் ரிப்போர்ட்

Update: 2023-07-13 07:41 GMT

இந்திய சிறைகளில் உள்ள கைதிகளுக்கு காச நோய் தாக்கும் அபாயம், பொது மக்களுக்கு ஏற்படும் அளவை விட ஐந்து மடங்கு அதிகம் உள்ளதாக புகழ்பெற்ற லேன்செட் மருத்துவ ஆயவிதழ் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.

193 நாடுகளில், 2000 முதல் 2019 வரையிலான தரவுகளை ஆய்வு செய்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, கைதிகளுக்கு காச நோய் தாக்கம் பற்றிய விரிவான அறிக்கையை லேன்செட் இதழ் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் சிறை கைதிகளில் 1,௦௭௬ பேருக்கு காச நோய் ஏற்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

அதே சமயத்தில் இந்திய மக்கள் தொகையில், ஒரு லட்சம் பேரில் 210 பேருக்கு காச நோய் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

உலக அளவில் பொது மக்களை விட சிறைக் கைதி களிடையே காச நோய் தாக்குதல் 10 மடங்கு அதிகம் உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

2019ல் உலக அளவில் 1.1 கோடி பேர் சிறையில் இருந்தனர். இவர்களில் 1.25 லட்சம் பேருக்கு 2019ல் காச நோய் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது ஒரு லட்சம் கைதிகளில் 1,148 பேருக்கு காச நோய் ஏற்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில், காச நோய் தாக்குதல் ஒரு லட்சம் பேருக்கு 127ஆக இருந்தது ஒப்பிடத்தக்கது.

ஆனால் உலக அளவில், காச நோய் தொற்றிய சிறைக் கைதிகளில் 53 சதவீதத்தினர் மட்டுமே அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர்.

கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகம் கொண்ட, நெரிசல் மிகுந்த சிறைச்சாலைகளில், காச நோய் தாக்கம் மிக அதிகமாக உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

அதிக பட்சமாக ஆப்பிரிக்க நாடுகளில், ஒரு லட்சம் கைதிகளில் 2,242 பேருக்கு காச நோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்