சாலையோரம் தூங்கி கொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் மீது கார் மோதி ஸ்பாட்டிலேயே பலி

Update: 2023-07-02 04:50 GMT

திருப்பூர் மாவட்டம்அவிநாசி அருகே வீட்டின் முன்பு சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் மீது கார் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவிநாசியை அடுத்த காசி கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் காங்கேயம் சார்பு நீதிமன்றத்தில் இளநிலை கட்டளைதாரராக பணிபுரிந்து வருகிறார். விடுப்பில் உள்ள அவர் மகா நகரில் உள்ள தனது வீட்டின் முன்பு சாலையோரம் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அவ்வழியே வந்த கார் ராமசாமி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை அஜாக்கிரதையாக ஒட்டிய குருமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த ராமசாமியின் உடலுக்கு நீதிமன்ற ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்