கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்த குழந்தை - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்

Update: 2023-05-24 02:04 GMT

ஈரோடு அருகே கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்த 3 வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் புங்கம்பள்ளியில் வசித்து வருபவர் செல்லப்பாண்டி. இவரது 3 வயது பெண் குழந்தையான ரித்திகா, குளியலறையில் வைக்கப்பட்டிருந்த வெந்நீரில் தவறி விழுந்து, பலத்த காயமடைந்தார். இதனைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்