குமரி மாவட்டம் அதங்கோடு பகுதியில் குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு, பாரம்பரிய நாட்டு வைத்தியம் மற்றும் களரி பயிற்று ஆசான்களை கவுரவிக்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் நாட்டு மூலிகை செடி கண்காட்சி, பாரம்பரிய உணவு கண்காட்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. தொடர்ந்து பாரம்பரிய கலைகளான சிலம்பம், வாள் சண்டை, களரி, சுருட்டு வாள் வீச்சு உள்ளிட்ட சாகசங்களை மாணவர்கள் செய்து காண்பித்து, ஆசான்களிடம் ஆசி பெற்றனர்.