கோவை மாவட்டத்தை சேர்ந்த சைக்கிளிங் வீராங்கனைக்கு சுமார் 14 லட்ச ரூபாய் மதிப்பிலான மிதிவண்டியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார். மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு பயின்று வருபவர் தபித்தா. சைக்கிளிங் வீராங்கனையான இவர், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறுவதற்கு ஏதுவாக, போட்டிகளுக்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மிதிவண்டியை வழங்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் 13.99 லட்ச ரூபாய் மதிப்பிலான Argon 18 PRO என்ற மிதிவண்டியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தபித்தாவிற்கு வழங்கினார்.