துருக்கியில் இஸ்தான்புல் மேயர், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கற்களை வீசியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மேயர் பத்திரமாக அழைத்து செல்லப்பட்ட நிலையில், எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆளும் காட்சியின் கோட்டையாக கருதப்படும் இஸ்தான்புல் நகரத்தில், எதிர்கட்சியை சேர்ந்த மேயர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.